2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார பட்டம் விடும் வழா

Super User   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- மாணிக்கப்போடி சசிகுமார்


சமூக ஒருமைப்பாட்டின் ஊடாக தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு மரபுரிமைகள் அமைச்சு தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி மூன்று இனங்களையும் பிரகடனப்படுத்திய பட்டம் விடும் நிகழ்வினையும் நாடாத்தவுள்ளது.

இதற்கு இணைவாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளை அறிவுறுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு மரபுரிமைகள் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதற்கான அனுசரனையினை யு.என்.டி.பி வழங்கியிருந்தது.

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, கலாசார பங்களிப்புகள் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பல்வேறு நிறங்கள் ஒரு வானத்தின் கீழ் எனும் தொனிப்பொருளின் கீழ் 19 ஆம் திகதி கல்லடி கடற்கரையில் நடத்தப்படவுள்ள பட்டம் விடும் விழாவில், இளைஞர் யுவதிகளுக்கான பட்டம் தயாரிக்கும் பயிற்சிகளும் அறிவுறுத்தும் நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு மரபுரிமைகள் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட செயலக இணைப்பாளர்கள், யு.என்.டி.பியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .