2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு வவுணதீவு விபுலானந்தா விளையாட்டுக்கழகத்தின் 28ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது.

கழகத் தலைவர் அ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், வவுணதீவு பரமேஷ்வரா வித்தியாலய அதிபர் மா.யோகேந்திரன், வவுணதீவு பிரதேச சம்மேளனத் தலைவர் செ.அழகரெத்தினம், ஊர் பிரமுகர்கள், கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கப்பட்டன.

மேலும் வவுணதீவுப் பிரதேசத்தில் இயங்கும் பாலர் பாடசாலையில் எவ்வித ஊதியமும் இன்றி கடமையாற்றும் ஆசிரியர் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோரால் நினைவுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியானது கலந்துகொண்ட அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .