2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இளவாலை சென். ஹென்றியரசர் அணி சம்பியன்

Super User   / 2014 ஜூலை 21 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் 170 ஆவது நிறைவு ஆண்டினைக் கொண்டாடும் முகமாக யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (20) இரவு மின்னொளியில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் எஸ்.அனோஜன் அடித்த கோல் மூலம் ஹென்றியரசர் அணி 1:0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றது.

எனினும் இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இறுதியில் ஹென்றியரசர் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கபடியிலும் ஹென்றியரசர் அணி சம்பியன்

19 வயதுப்பிரிவு ஆண்கள் கபடி அணிகளுக்கிடையில் நடத்திய கபடிப் போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது.

கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் உள்நுழைந்தன.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (20) மாலை இடம்பெற்றது.

முதல் பாதியாட்டத்தினை ஹென்றியரசர் அணி, 12:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் தலா 9 புள்ளிகள் பெற்றன.

இறுதியில் ஹென்றியரசர் அணி 21:19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.




 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X