2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தேசிய கால்பந்தாட்டச் சம்பியன் வீரர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா, குணசேகரன் சுரேன்


கொழும்பு ஆனந்தாக் கல்லூரியினால் தேசிய மட்ட 17 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சம்பியனாகிய இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி வீரர்கள் இன்று வியாழக்கிழமை (31) கௌரவிக்கப்பட்டனர்.

சாம் சமரசிங்க ஞாபகார்த்மாக, அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளாக நடைபெற்ற மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில் பொலநறுவை றோயல் மத்திய கல்லூரி அணியும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியும் மோதின.

இதில், இளவாலை ஹென்றியரசர் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மேற்படி சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆன நிலையில், முதன்முறையாக இவ்வருடம் வடமாகாணத்தினைச் சேர்ந்த அணியாக இளவாலை ஹென்றியரசர் அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்பியனாகிய வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்றது.

இதன்போது, அணி வீரர்கள் தெல்லிப்பளைச் சந்தியிலிருந்து ஊர்வலமாக கல்லூரி வரையிலும் அழைத்து வரப்பட்டனர்.

இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X