2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

'கிழக்கு மக்கள் விளையாட்டுத்தறையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்தல்லா

'அரசாங்கம் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளையும், செலவீனங்களையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தில் மக்களும் அதிகாரிகளும் அதில் கூடிய கவனம் செலுத்தாமல் இருந்து வருவது கவலைக்குரிய வி;டமாகும்' என கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டு விழா சனிக்கிழமை (02) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர், 
'மாவட்ட விளையாட்டு விழா ஒன்றில் பொதுமக்கள் எவருமில்லாத ஒரு மைதானமாகக் காட்சியளிப்பது பாரிய குறைபாடாகும்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருப்பதில் நான் மிகுந்த மனவேதனை அடைகின்றேன். இவ்விழாவில் பிரதேச செயலாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொள்ளத் தவறியமை அதன் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துள்ளதாகவே கருதுகினறேன்.

எமது கிழக்கு மாகாணம் விளையாட்டுத்துறையில் 2012 ஆண்டுவரை இறுதியான நிலையிலேயே இருந்து வந்தது. சென்ற வருடம் 2013 ஆண்டு 7ஆவது இடத்துக்கு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

அது மேலும் ஆறாவது இடத்திற்கு வருவதானால் பாரிய சவால்களை எதிர்நோக்கவெண்டியுள்ளதுடன் மிகுந்த அர்ப்பணிப்புக்களையும், கூட்டுப் பொறுப்பினையும் கொண்டமைந்ததாக அத்துறை மாற்றப் படல் வேண்டும்.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது கிழக்கு மாகாணத்திலுள்ளவர்கள் அதிக ஆர்வமும், அக்கறையும் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே, இத்துறை சார்ந்த அத்தனை தரப்பினரும் இதனை மேலும் கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும்'என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X