2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டம் ஆரம்பம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா


இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டப் போட்டிகள் முதன்முறையாக யாழ்;ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (08) முதல் ஆரம்பமாகின.

1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக் கால்ப்பந்தாட்டப் போட்டிகளின் இவ்வருடப் போட்டிகளில், 14 பல்கலைக்கழகங்களின் அணிகள் பங்குபற்றுகின்றன.

அதன்படி வெள்ளிக்கிழமை (08) மற்றும் சனிக்கிழமை (09) ஆகிய தினங்களில் தெரிவுப் போட்டிகள், யாழ். பல்கலைக்கழக மைதானம் மற்றும் வட்டுக்கோட்டை யாழ். கல்லூரி மைதானம் ஆகியவற்றில் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற ஆரம்பநிகழ்வில், யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் எ.சூசைஆனந்தன் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X