2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாவட்டமட்ட கராத்தே சுற்றுப்போட்டி : ஆலையடிவேம்பு சம்பியன்

Super User   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.சுகிர்தகுமார்


இலங்கை விளையாட்டுத் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்டமட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.

இப்போட்டிகளில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் கராட்டி அணிகள் பங்குபற்றியிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக குழுவிற்கு விளையாட்டு உத்தியோகத்தர் அழகையா ரிஷாந்தன் தலைமை தாங்கினார்.

ஆண்களுக்கான 'கட்டா' போட்டியில் கே.சாரங்கன் இரண்டாம் இடத்தையும், கே.ரஞ்சி மூன்றாம் இடத்தையும் பெற்றதுடன், ஆண்களுக்கான 50 கிலோகிராம் எடைக்குட்பட்ட 'குமிட்டி' போட்டியில் கே.ரஞ்சி மூன்றாம் இடத்தையும் 84 கிலோகிரமிற்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட ரி.சின்னத்தம்பி முதலாம் இடத்தையும், கே.சாரங்கன் இரண்டாம் இடத்தையும் பெற்று இப்பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற பாராட்டு விழாவில் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட கிழக்கு மாகாண (துமுஆழு) பிரதம போதனாசிரியர் சென்சி கே.கேந்திரமூர்த்தி மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிஷந்தன் உள்ளிட்ட வீரர்களும் பிரசன்னமாயிருந்ததுடன் சுவீகரித்த வெற்றிக்கிண்ணத்தை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பெருமையோடு பெற்றுக் கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .