2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தெற்காசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பாலுராஜ் கௌரவிப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம்வென்ற சௌந்தராஜன் பாலுராஜ்யை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15)  கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கராத்தே போட்டி அன்மையில் இந்தியாவின் புது டில்லி நகரில் நடை பெற்றது இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிரதேச  சேனைக்குடியிருப்பு  கிராமத்தை சேர்ந்த சௌந்தராஜன் பாலுராஜ் காட்டா  பிரிவில் தங்கப் பதக்கத்தையும் குமிட்டே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்துள்ளார்.

சேனை குடியிருப்பு கிராம மக்கள் அமைப்புகளின்;  ஏற்பாட்டில் ஒய்வு பெற்ற அதிபரும், கராட்தே  சம்மேளனத்தின் அம்பாறை மாவட்ட தலைவருமான எஸ்.சந்திரலிங்கம் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜகுலேந்திரன், சேனைகுடியிருப்பு  வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன், கல்முனை பொலிஸ்  நிலைய  பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி ஏ.எம்.வாஹிட் உட்பட சாதனை வீரனின் தாயார் திருமதி அன்னம்மா சௌந்தராஜன் உட்பட அதிகாரிகள் பலரும்  பொதுமக்களும் கலந்து  பாராட்டிகௌரவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .