2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மைதான புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டு

Super User   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்   


மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி கிராமத்தின் பொது விளையாட்டு மைதான புனரமைப்புக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடப்பட்டது.
 
பொருளாதான அபிவிருத்தி அமைச்சின் 'நாட்டின் எழுச்சி தேசிய அபிவிருத்திச் செயற்பாடு' எனும் திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபாய் செலவில் இவ்விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவுள்ளது.
 
களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
 
மேலும் இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உட்பட பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X