2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூன்று விளையாட்டுக்கழகங்களுக்கு 190,000 ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வியாழக்கிழமை(4) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விளையாட்டு உபகரணங்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

மண்முனைப் பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், மண்முனைப் பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பி.சுரேஸ்குமார் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது பாலமுனை கோல்ட்; ஸ்டார் விiளாட்டுக்கழகம், மற்றும் காங்கேயனோடை கோல்டன் ஸ்;டார் விளையாட்டுக்கழகம், காங்கேயனோடை விiளாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இவ் விளையாட்டுக்கழகங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 190,000 ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .