2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊரெழு றோயல், ஞானமுருகன் இறுதிப்போட்டியில் மோதல்

Super User   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                                                                                               
ஞானமுருகன் அணி
-   குணசேகரன் சுரேன்


பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் அணியும் மயிலங்காடு ஞானமுருகன் அணியும் மோதவுள்ளன.

இறுதிப்போட்டி வல்வை ரெஜின்போ மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெறவுள்ளது.

மேற்படி சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த 70 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

ஊரெழு றோயல், மயிலங்காடு ஞானமுருகன், திக்கம் இளைஞர்கள், நவஜீவன்ஸ் ஆகிய அணிகளே அரையிறுதிக்கு தெரிவாகின.

அரையிறுதிப்போட்டிகள், ஜ.பி.எல் துடுப்பாட்டப் போட்டிகளில் பின்பற்றப்படும் பிளேஓவ் முறைப்படி இடம்பெற்றது.

இதன்படி முதல் இரண்டு இடங்களிலும் இருந்த ஊரெழு றோயல் மற்றும் மயிலங்காடு றோயல் அணி முதலில் மோதின. இதில் ஊரெழு றோயல் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மயிலங்காடு ஞானமுருகன் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பமான மேலும் ஒரு போட்டிக்காக காத்திருந்தது.

தொடர்ந்து, திக்கம் இளைஞர்கள், நவஜீவன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது. இதில் திக்கம் இளைஞர்கள் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து, மயிலங்காடு ஞானமுருகன் அணியும் திக்கம் இளைஞர்கள் அணியும் மோதின.
இதில் ஞானமுருகன் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

                                                                                                                                                         ஊரெழு றோயல் அணி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .