2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


148 ஆவது பொலிஸ் தினத்தையொட்டி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேக பூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற அணி சம்பியனானது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அணியினருக்கும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற அணியினருக்கிமிடையில் வெள்ளிக்கிழமை(5) அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற அணியினர்  6க்கு பூஜ்ஜியம் என்ற கோள் கணக்கில் வெற்றிபெற்றனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.அலக்ஸ்ராஜா பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்தார்.

அணிக்கு ஏழுபேர் கொண்ட இப்போட்டி கடும் மழைக்கு மத்தியில் மிகவும் சுறு சுறுப்பான போட்டியாக அமைந்து.

நீதிமன்ற அணியின் வீரர்களான முகம்மட் இர்பான், எம்.சியாம் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தின் பிரதிபலிப்பினால் பொலிஸ் அணியினருக்கு 6 கோள்கள் போடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .