2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது கந்தர்மடம் வின்னர்ஸ் அணி

George   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


மாதகல் நாவலர் புயல் விளையாட்டு கழகம், யாழ். மாவட்ட ரீதியில் நடத்திய, அணிக்கு 9 பேர் மற்றும் 8 பந்து பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டியில் கந்தர்மடம் வின்னர்ஸ் அணி சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை (06) மாலை மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் கந்தர்மடம் வின்னர்ஸ் அணியும் குப்பிளான் குறிஞ்சிக்குமரன்விளையாட்டு கழக அணியும் மோதின.

நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 8 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 52 ஓட்டங்களை பெற்றது.

53 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கந்தர்மடம் வின்னர்ஸ் அணி, 7.2 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக கந்தர்மடம் வின்னர்ஸ் அணியின் எஸ்.வினோத் (32 ஓட்டங்கள்) தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றிபெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களையும், வெற்றிக்கிண்ணங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் பொ.நடராஜா ஆகியோர் வழங்கினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .