2025 ஜூலை 09, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வு 5ஆம் கொலணி தாருல் ஹிக்மா அரபுக்கலாசாலை மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், மைகோர்ப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் சமூக சேவையாளருமான லயன் சித்தீக் நதீர். அரபுக் காலாசாலை அதிபர் ஏ.சீ.எம்.அன்வர், விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர்,உறுப்பினர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் நாடாளுமன்ற உறுப்பினரின் இவ்வாணடுக்கான பன்முகப்படுத்தப்பட்ட 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இப்பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .