2025 ஜூலை 09, புதன்கிழமை

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் அணி வெற்றி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலைகளான வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மற்றும் புனித சிசிலியா பெண்கள் பாசடாலை ஆகிய இரண்டு பாடசாலைகளுக்குமிடையில் சனிக்கிழமை நடைபெற்ற பாடுமீன் சமர்  'பிக் மெட்ச்' கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, இருபது ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித சிசிலியா பெண்கள் பாடசாலை அணி 19.4 ஓவர்களில் ஆறு விககெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இப்போட்டியின் சிறப்பாட்ட நாயகியாக புனித சிசிலியா பெண்கள் பாடசாலை அணி சார்பில் 55 ஓட்டங்களைப் பெற்ற மயூரி சண்முகலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

பரிசளிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மற்றும் மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.லவக்ககுமார் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • shiromi Lakshanthi Tuesday, 28 October 2014 08:17 AM

    வாழ்த்துக்கள். மீண்டும் இதுபோன்ற சாதனைகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .