2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இம்றான் விளையாட்டுக்கழகம் வெற்றி

George   / 2014 நவம்பர் 17 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.அஷ்ரப்கான்


கல்முனை ஏஜ் ஸ்றீல் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவையொட்டி  நடாத்தப்படும்  ஏஜ் ஸ்றீல் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரின் 25ஆவது போட்டியில்  நிந்தவூர்  பிரதேசத்தின் முன்னணி கழகமான இம்றான் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

சனிக்கிழமை (15) சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் யங் பேட்ஸ் விளையாட்டுக்கழத்தை எதிர்த்து இம்றான் விளையாட்டுக்கழகம் மோதியது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பேட்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 19.4  ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இவ்வணி சார்பாக அதிகூடிய ஓட்டமாக றிஹான் 72 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நஜாத் 4 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்றான் விளையாட்டுக்கழகம் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 15.2 பந்துகளை மாத்திரமே சந்தித்து, 2 விக்கெட்டுக்களை இழந்து, 147 ஓட்டங்களைப்பெற்று வெற்றி பெற்றது.

மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய 69 பந்துகளை  சந்தித்து ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்ற நிக்ஸி, இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .