2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கண்டி விளையாட்டு கழகம் வெற்றி

George   / 2014 நவம்பர் 17 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்   


கண்டி விளையாட்டு கழகத்திற்கும் ஹெவ்லொக்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையில், சனிக்கிழமை(15) கண்டி நித்தவெல விளையாட்டு மைதானத்தில இடம்பெற்ற றகர் போட்டியில் 25 - 24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹெவ்லொக்ஸ் அணி 17 புள்ளிகளைப் பெற்றிருந்த போது,கண்டி அணி 3 புள்ளிகளை மாத்திரமே பெற்றிருந்தது.

இடைவேளையின் போதும் ஹவ்லொக்ஸ் அணி 17- 3 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. இடைவேளையை அடுத்து ஹெவ்லொக்ஸ் அணி கோலொன்றை போட புள்ளிகளின் எண்ணிக்கை 24 - 3 என்ற அடிப்படையில் அமைந்தது.

இடைவேளையின் பின்னர் கண்டி அணி தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. அதன்போது கண்டி அணியின் புள்ளி 13 ஆக உயர்ந்தாலும் தொடர்ந்தும் ஹவ்லொக்ஸ் அணியே முன்னிலை வகித்தது.

இந்நிலையில் கண்டி அணியின் வீரர் சாலியா குமார கோலொன்றை போட, புள்ளி எண்ணிக்கை 24- 20 ஆனது.

போட்டி முடிய சில விநாடிகளே இருந்த நிலையின் கண்டி அணிக்கு கிடைத்த ஒரு ட்ரை மூலம் கண்டி அணியின் வெற்றி நிச்சயமானது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .