George / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் பங்கேற்ற வீதியோட்டம், கலாசாலை முன்றலில் சனிக்கிழமை(31) இடம்பெற்றது.
ஆண் ஆசிரியர்களுக்கான போட்டியில் 73 பேர் பங்குபற்றியிருந்தனர். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து புறப்பட்டு இராசவீதியூடாக நல்லூரை அடைந்து பருத்தித்துறை வீதியூடாக மீண்டும் கலாசாலையை அடைந்தனர்.
பெண் ஆசிரியர்களுக்கான போட்டியில் 227 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். கலாசாலை முன்றலில் ஆரம்பித்து, இராச வீதியூடாக ஆடியபாதம் வீதியை அடைந்து, அங்கிருந்து கல்வியங்காட்டுச் சந்தியை அடைந்து, பருத்தித்துறை வீதியூடாக மீளவும் கலாசாலையை வந்தடைந்தனர்.
ஆண் ஆசிரியர்களுக்கான போட்டியில் இ.ஜெனிஸ்ரன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். இரண்டாமிடத்தை எம்.சந்திரகுமாரும் மூன்றாமிடத்தை எஸ்.சத்தீஸ்வரனும் பெற்றுக்கொண்டனர்.
பெண் ஆசிரியர்களுக்கான போட்டியில் இ.யமினா, முதலிடத்தையும் இரண்டாமிடத்தை பு.இன்பரூபி, மூன்றாமிடத்தை ச.துஷந்தினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
12 minute ago
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
32 minute ago