2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வு

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் சைனப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள், அதிபர் பெலஜியா அபுல் ஹூதா தலைமையில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றன.


கதீஜா, ஆயிஷா, ஹப்ஸா ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் ஹப்ஸா இல்லம் முதலிடத்தையும் ஆயிஷா இல்லம் இரண்டாமிடத்தையும் கதீஜா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.


இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதாவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான  கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.


கௌரவ அதிதிகளாக புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர்  இசட்.ஏ.சன்ஹீர், கல்பிட்டி கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம். அனீஸ், புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.சி.எம். மஹ்ரூப்  உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .