2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட வெற்றியாளர்கள் கௌரவிப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெற்ற உடுவில் பிரதேச இளைஞர் சம்மேளனத்துக்குட்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (23) வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

உடுவில் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளனத் தலைவர் எஸ்.விஜிதரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் பன்முகப்படுத்த நிதியில் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், உடுவில் பிரதேச இளைஞர் சம்மேளனத்துக்கு கீழுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தலைவர் தி.பிரகாஸ், யாழ் மாவட்ட இளைஞர் சேவை அலுவலர்களான திருமதி வினோதினி ஸ்ரீமேனனன், எஸ்.சண்முகவடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .