2025 நவம்பர் 19, புதன்கிழமை

நவஜீவன், நவசக்தி இறுதிக்கு தகுதி

Gavitha   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வின் கால்ப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன், கரவெட்டி நவசக்தி இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

20 இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் பங்குபற்றிய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

அரையிறுதிப் போட்டிகளில், முதலாவது அரையிறுதியில் வல்வெட்டி கருணாகரன் இளைஞர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன் இளைஞர் விளையாட்டுக்கழக அணி மோதியது. போட்டியின் தொடக்கம் முதல் ஆதீக்கம் செலுத்திய நவஜீவன் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் கரவெட்டி நவசக்தி இளைஞர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா இளைஞர் விளையாட்டுக்கழக அணி மோதியது. போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் பெற்றன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டு, சமநிலை தவிர்ப்பு உதையில் நவசக்தி அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டி மார்ச் மாதம் 8 ஆம் திகதி இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X