2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிஸ்மி அணி சம்பியன்

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்துக்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பிஸ்மி அணி சம்பியனாகியது.  


இப்போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) காத்தான்குடி கடற்கரையிலுள்ள வளவொன்றில்  இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனத்தின் அனுசரணையில் கல்வி மற்றும் சமூகத்துக்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சஹீத் தலைமையில் இடம்பெற்ற இக்கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 6 அணிகள் பங்குபற்றின.


இறுதிப்போட்டியில் பிஸ்மி அணி 2:0 என்ற நேர் செற்கள் அடிப்படையில் ஒஸ்மான் அணியை வீழ்த்தி சம்பியனாகியது.
காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் மற்றும் கிராம உத்தியோகத்தர் எம்.றவூப் ஆகியோர் வழங்கி வெற்றிக் கிண்ணங்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .