Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மார்ச் 03 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோயத கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது ஆண்டு கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இந்த போட்டியானது, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தவரோதயா, 41.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.கதியோன் 52, என்.சஞ்சயன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
மகாஜனாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய என்.தனுஸ்டன் 12.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஒவருடன் 39 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், ஆர்.லக்ஸ்மன் 07 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு முதலாவது இனிங்ஸுக்காக களமிறங்கிய மகாஜனாக் கல்லூரி, 76 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. என்.ஜசிந்தன் 33, எம்.பிரணவன் 32, எம்.கபிலன் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயா அணி சார்பாக என்.சுகிர்தரன் 14 ஓவர்கள் பந்து வீசி, 10 ஓட்டமற்ற ஓவர்களுடன் 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் எம்.விதுசாந் 08 ஓவர்கள் பந்து வீசி 03 ஓட்டமற்ற ஒவர்களுடன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் எஸ்.துசிதரன் 10 ஓவர்கள் பந்து வீசி 48 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
50 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா அணி, 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.கதியோன் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மகாஜனா சார்பாக, என்.தனுஸ்டன் 14 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், எம்.ஜெரோம் 9.3 ஓவர்கள் பந்துவீசி 16 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
61 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனா 19 ஓவர்களில 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. என்.ரதிகரன் 17, எம்.சாரங்கன் 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
ஸ்கந்தவரோதயா சார்பில் பந்து வீசிய என்.சஞ்சயன் 08 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கதியோன் 03 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
சிறந்த துடுப்பாட்ட வீரன் கதியோன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி)
சிறந்த பந்து வீச்சாளர் என்.தனுஸ்ரன் (மகாஜனாக் கல்லூரி), சிறந்த களத்தடுப்பாளர் எஸ்.சயந்தன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), சகலதுறை வீரன் ஆர்.ஜெயந்தன் (மகாஜனாக் கல்லூரி), ஆட்டநாயகன் என்.தனுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி), சிறந்த துடுப்பாட்ட வீரன் எஸ்.கதியோன் (ஸ்கந்தவரோதயாக் கல்லூரி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago