Gavitha / 2015 மார்ச் 14 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.நவோஜ்
தேசிய அரசாங்கத்தின் இருப்பு, வட கிழக்கிலே சுய நிர்ணய உரிமையுள்ள ஒரு பிரதேசத்தை உருவாக்கும். ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
நூறு நாட்கள் வேலைத்திட்டத்தோடு நாடாளுமன்றம் கலைந்துவிடாது. 2016ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற மட்டக்களப்பு, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வில், அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'இன்று ஒரு வசதியீனமான முறையிலே இங்கு ஒரு சிறந்த விளையாட்டுப் போட்டியை நிகழ்த்திக்; காட்டியுள்ளீர்கள். இந்த விளையாட்டு போட்டியில் சகலரையும் கவரக்கூடிய உடற்பயிற்சிக் கண்காட்சி சிறப்பாக இருந்தது.
ஆனாலும் பெண் பிள்ளை மாத்திரம் வைத்து உடற்பயிற்சி கண்காட்சிகளை நடாத்துவது ஒரு கவலையான விடயம். அனேகமான பாடசாலைகளில் ஆண் பிள்ளைகளை விட்டுவிட்டு உடற்பயிற்சி கண்காட்சி செய்து காட்டுவது கவலை தருகின்ற விடயம். இனிவருகின்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இந்த ஊருக்கு விளையாட்டு மைதானம் இல்லாமை மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. 1977ஆம் ஆண்டில் இந்த பிரதேசத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.
ஆனால் காலாகாலமாக தமிழரசுக்கட்சியை ஆதரிப்பவர்கள், இந்த பொது மைதானம் அமைப்பதிலே ஈடுபாடு காட்டியதன் காரணமாக, அவர்களை பலி வாங்குகின்ற நோக்கத்திலே அன்று இருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், அந்த விளையாட்டு மைதானத்தை அவரது ஆதரவாளர்களுக்கு குடியிருப்புக்காக வழங்கிவிட்டார். அதன் காரணமாக 1977களில் இப்பிரதேசத்துக்கு வரவிருந்த விளையாட்டு மைதானத்தை நாம் இழந்துவிட்டோம்.
தேசிய அரசாங்கம் இருந்தால் மட்டும் தான், தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படும். இந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தோடு நாடாளுமன்றம் கலைந்து விடாது என்று நான் நினைக்கின்றேன். 2016ஆம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் சென்றாலும் கூட நல்லாதாகத்தான் அமையும்' என்று தெரிவித்தார்.
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago