2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட கிரான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் இறுதி போட்டி  நேற்று வியாழக்கிழமை (19) மாலை வித்தியாலயத்தின் அதிபர் சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கிரான் மகா வித்தியாலயத்தின் இறுதி நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) ரவி, கோட்டக்கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம், உடற்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரன், உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.ரமேஷ், அழைப்பு அதிதிகள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுகளை அலங்கரிக்கும் முகமாக அதிதிகள் வரவேற்கப்பட்டதும் கொடியேற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றுலுடன் அனைத்து விளையாட்டுக்களும் ஆரம்பமாகியது.

விளையாட்டுக்களில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்குரிய வெற்றிக்கேடயங்கள் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .