2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் வெற்றி

George   / 2015 மார்ச் 23 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அராலி சரஸ்வதி வித்தியாலயம் சம்பியனாகியது. 

அராலி சரஸ்வதி மகா வித்தியாலய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மற்றும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணிகள் மோதிக்கொண்டன. 

முதல் பாதி ஆட்டத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய அராலி அணி, 17:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்;டத்தை விக்டோரியா அணியினர் தங்கள் வசமாக்கினர்;. இதனால் போட்;டி விறுவிறுப்பான நிலையை அடைந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் விக்டோரியா அணி, 15:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. 

மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி, 23:21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .