Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2015 மார்ச் 23 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ். கன்னியர் மடம் மகா வித்தியாலய அணி 45:43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கமும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் இந்த கூடைப்பந்தாட்;ட சுற்றுப்போட்டியை நடத்தின.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் சனிக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியும், யாழ்ப்பாணம் கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.
முதல் மூன்று சுற்றுக்களையும் கன்னியர் மடம் மகா வித்தியாலய அணி 10:04, 16:10, 17:14 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது. நான்காவதும் இறுதியுமான சுற்றில் வீறுகொண்டு எழுந்த இராமநாதன் மகளிர் கல்லூரி அணி, 15:02 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டது.
மொத்தப்புக்களின் அடிப்படையில் கன்னியர் மடம் மகா வித்தியாலய அணி, 45:43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago