Thipaan / 2015 மார்ச் 28 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கமறி இல்லம் சம்பியனாகியது.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தில், வியாழக்கிழமை (26) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கமறி இல்லமும் பஜ்றி இல்லமும் தகுதிபெற்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பஜ்ரி இல்லம் 8 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 33 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் சாமில் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கமரி இல்லம் 7 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.
பந்துவீச்சில் எம்.நவாஸ் 2 இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக உடற்கல்வி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.மன்சூர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago