2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் நிறைவு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணியும் புத்தளம் லிவர்பூல் அணியும் கலந்துகொண்ட கால்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடத்தும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடருக்கான இப்போட்டி, புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.

போட்டி ஆரம்பித்து 30ஆவது வினாடியில் லிவர்பூல் அணிக்கு கிடைக்கபெற்ற கோல் போடுவதற்கான சந்தர்ப்பத்தை அவ்வணியின்  வீரர் எம்.நஸீம் தவறவிட்டமை அவ்வணி இறுதி வரைக்கும் கோல் போடுவதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் ஆக்கியது.

இந்த சுற்றுப்போட்டியில் அதிக கோணர் கிக் கிடைத்த சந்தர்ப்பம் நியூ ஸ்டார்ஸ் அணிக்கும் கோணர் கிக் எதுவுமே கிடைக்காத சந்தர்ப்பம் லிவர்பூல் அணிக்கும் பதிவாகியுள்ளது.

இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் இரு அணிகளுமே தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றுக்கொண்டன.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ.எம். பஸ்ரின், எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஓ.எம். அஸாம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .