2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகம் வெற்றி

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்துக்கும் அநுராதபுரம் ஸஹ்றியன் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையில்  செவ்வாய்க்கிழமை (14)  நடைபெற்ற சினேகபூர்வ கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் 6-0  என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சட்டத்தணி எச்.எம்.எம். ஹரிஸ்  கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டிக்கு பிரதான நடுவராக எம்.எல்.ஏ.தாஹிரும் உதவி நடுவர்களாக ஏ.எம்.ஜப்ரான், எஸ்.எல்.வை.அறபாத் ஆகியோர் கடமையாற்றினர்.

போட்டியின் ஆரம்பம் முதல் சனிமௌன்ட் அணியினர் மிகச்சிறப்பாக விளையாடினர். இப்போட்டிக்கு கூடுதலான ரசிகர்கள் வருகை தந்திருந்மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .