Princiya Dixci / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சோபர் விளையாட்டுக்கழகத்தின் உப தலைவருமாகிய ஏ.எஸ்.எம்.உவைஸின் தனிப்பட்ட நிதியிலிருந்து மீனோடைக்கட்டு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (23) மீனோடைக்கட்டு கரப்பந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஏ.நபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சோபர் விளையாட்டுக்கழகத்தின் உப தலைவருமாகிய ஏ.எஸ்.எம்.உவைஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீரர்களுக்கான கிரிக்கெட் மற்றும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago