Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில், பசறிச்சேனைக் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் மண்டபத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை(29) நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவ்விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் மண்டபம் என்பன முன்னாள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் 60 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
பசறிச்சேனைக் கிராமத்தில் மிக நீண்டகாலமாக பொது விளையாட்டு மைதானம் மற்றும் பார்திருப்போர் மண்டபம் இல்லாததால் அப்பிரதேச விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேற்படி குறைபாடுகள் தொடர்பில் பசறிச்சேனை இளைஞர் விளையாட்டுக்கழங்கள் மற்றும் புத்தி ஜீவிகள் அடங்கிய குழுவினர் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் கவனத்துக்கு கொண்டு வந்தததுடன் அவர் இவ்விடயத்தை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருமான ஏ.பதுர்காண் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago