2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தோப்பூர் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப விழா

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தோப்பூர் கிண்ணத்தின் ஆரம்ப விழா, தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிஸாம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழா நிகழ்வில் அதீதிகள் விளையாட்டு வீரர்களின் ஆரவாரத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தோப்பூர் பிரதேசத்தின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.எம்.அனஸ் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் விளையாட்டுக்கழகத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் வெளியிடப்பட இருக்கின்ற நூல் வெளியீட்டுக்காக தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு உட்பட்ட 22 கடின பந்து அணிகளினது தலைவர்கள் அதீதிகளுடன் புகைப்படம் எடுத்தனார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மகரூப், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், பிரதி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான பீ.டீ.ஆப்தீன், ஏ.ஜீ.நிஸ்மி, மக்களுக்கான உதவி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளருமான ஏ.எஸ்.எம்.தாணீஸ் மற்றும் தோப்பூர் 222ஆவது இராணுவ கட்டளைத் தளபதி விக்கும் லியனகே மற்றும் மூதூர் ஹாதி நீதிவான் எஸ்.எம்.றிஸ்வான் ஆகியோரும் இந்நிகழ்வில் அதீதிகளாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .