2025 நவம்பர் 19, புதன்கிழமை

தெல்லிப்பழை யூனியன்ஸ் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கனகநாயகம் சுயந்தன் ஆட்டமிழக்காது பெற்ற சதம் மற்றும் எஸ்.ஜனோசன் பெற்ற அரைச்சதம் மூலம் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில், தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகமும் தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிஸ் விளையாட்டுக் கழகம், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.

பிரதீப் 46, ஹரிஹரன் 31,  தீபன் 27, சத்தியன் 23 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக  51 ஓட்டங்களும் பெறப்பட்டன. யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஜனோசன் 7.3 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கோபிகிருஸ்ணா 06 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 11 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் தயாளன் 08 ஓவர்கள் பந்து வீசி 33 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 36 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சுயந்தன் ஆட்டமிழக்காது 13 நான்குகள் ஐந்து ஆறுகளுடன் 103 ஓட்டங்களையும் ஜனோசன் எட்டு நான்குகள், நான்கு ஆறுகளுடன் 68 ஓட்டங்களையும் ஆதிசன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஹாட்லிஸ் சார்பில் பந்து வீசிய பிரசாத் 07 ஓவர்கள் பந்து வீசி 52 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X