2025 ஜூலை 05, சனிக்கிழமை

திங்கள் முதல் காலிறுதிகள்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் தொடரின், காலிறுதிப் போட்டிகளுக்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளன.

இத்தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகளும், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இத்தொடரில் முதலாவது காலிறுதிப் போட்டியில், சென். செபஸ்டியன் கல்லூரியும் ஸ்ரீ சுமங்கல கல்லூரியும், திங்களன்று மோதவுள்ளன.

இரண்டாவது காலிறுதிப் போட்டி ஓகஸ்ட் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அப்போட்டியில் கண்டி திரித்துவ கல்லூரியும் பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியும் மோதவுள்ளன.

12ஆம் திகதி போட்டிகளேதும் இல்லாத நிலையில், 13ஆம் திகதி இடம்பெறவுள்ள மூன்றாவது காலிறுதிப் போட்டியில், சென். பீற்றர்ஸ் கல்லூரியும் இசிப்பத்தன கல்லூரியும் மோதுகின்றன.

மறுநாள் இடம்பெறவுள்ள நான்காவது காலிறுதிப் போட்டியில், கொழும்பின் தேர்ஸ்டன் கல்லூரியும் ஆனந்தா கல்லூரியும் மோதவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .