2025 ஜூலை 16, புதன்கிழமை

26ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு

Super User   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.ணிஜாஹித்


26ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (30) மத்தியணமுகாம் றாணமடு இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்ற அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் டி.எம்.சிசிரகுமார, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய இளைஞர் கொள்கை திட்டமிடல் பிரதி அமைச்சர் ரி.சுதன், வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.ரொபின்சன், றாணமடு இந்து மகா வித்தியாலய  அதிபர் கே.தியாகராஜா, சமூக சேவையாளர் எஸ்.தீபன், பிரதேச இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் சிறந்த இளைஞர் சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு விருது பெற்ற நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால்  பென்னாடை போர்த்தி, வாழ்துப்பாவும் நினைவுச் சின்னணிம் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X