2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

26 ஆவது மட்டு. மாவட்ட விளையாட்டு விழா

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ரீ.எம்.பாரிஸ், ரீ.எல்.ஜவ்பர்கான


மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இனைத்து நடாத்திய  26 ஆவது மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா வெகு விமர்சையாக சனிக்கிழமை (14) மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

மட்டு. மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என் நைறூஸ் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜெயசுதாசன் கலாராணி ஆகியோரின் வழிகாட்டலுடன் நடை பெற்ற இவ் விழாவின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயக முர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,  எம்.எஸ்.சுபைர், சிப்லி பாரூக், கிழக்கு பிராந்திய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் கே.தவராஜா உள்ளிட்ட  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர். 

இவ் விழாவில் மட்டு. மாவட்டத்தின் பதின்நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .