R.Tharaniya / 2025 நவம்பர் 16 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நடைபெற்ற 23 வது ஆசிய மாஸ்டர்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த அ.ல.அலாவுதீன்பாபு சனிக்கிழமை (15) அன்று புரவலர் ஹாசிம் உமரால் திருகோணமலையில் வைத்து கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவரும் கலந்துகொண்டிருந்தார்.
இம் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை சென்னை,ஜவார்ஹால் நேரு சர்வதேச விளையாட்டரங்கில் 27 ஆசிய நாடுகள் பங்குபற்றிய 23 வது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் சார்பில் பங்குபற்றிய திருகோணமலையைச் சேர்ந்த அப்துல் லத்தீப் அலாவுதீன் பாபு சென்ற 6 ஆம் திகதி நடைபெற்ற 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் 3 ம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
எஸ்.கீதபொன்கலன்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago