R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண விளையாட்டுக்களில் ஒரு பகுதியான "வொடி Bபில்டர்" போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றிய அட்டாளைச்சேனை பிரதேச பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப் போட்டியில் ஆர்.எம். அஸ்மின் 60 கிலோ கிராம் எடை பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,எம்.எம். பாஷி அஹமட் 85 கிலோ கிராம் எடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்.ஏ. ருஸ்லி 70 கிலோ கிராம் எடை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், எம்.எம் ரிஸாட் 85 கிலோகிராம் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தை யும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இப் போட்டிக்காக செல்வதற்கு பல வழிகளிலும் ஆலோசனைகளை வழங்கிய அட்டாளைச் சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்ஸான், நாஜி ஜிம் உரிமையாளர், பயிற்றுவிப்பாளர்களாக ஆர்.ஏ. ரூஸ்லி, விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எம்.பாஸி அஹமட், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.நெளஸாத் மற்றும் பீனிக்ஸ் விளையாட்டு கழகத்தின் பொருளாளர் அஸ்லம் ஸஜா அத்துடன் இப்போட்டிக்கு செல்வதற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர் களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பீனிக்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் ஆர். நெளஷாத் தெரிவித்தார்.
எஸ்.அஷ்ரப்கான்
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago