2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

99 தங்கப்பதக்கத்துடன் மேல் மாகாணம் சம்பியன்

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.எம்.அறூஸ்

 விளையாட்டுத்துறை அமைச்சும்,விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 45ஆவது தேசிய விளையாட்டு விழா   பதுளை, வின்சென்ட் டயஸ் மைதானத்தில் அண்மையில் முடிவடைந்தது.

 இதில் 99 கூடுதலான தங்கப்பதக்கங்களைப் பெற்று ஒட்டு மொத்தமான சம்பியனாக மேல் மாகாணம் தெரிவு செய்யப் பட்டதுடன் ஜனாதிபதி வீர முதன்மைக் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர். 

51 தங்கப் பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தை மத்திய மாகாணம் பெற்றுக்கொண்டது. 32 தங்கப் பதக்கங் களைப் பெற்று வடமேல்மாகாணம் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதேவேளை, கிழக்கு மாகாணம் வழமை போன்று எட்டாவது இடத்திலும், வட மாகாணம் ஒன்பதாவது இடத்திலும் தெரிவாகியதுடன் எந்தவித முன்னேற்றத் தையும்வெளிக்காட்டியதாகத் தெரியவில்லை.

சம்பியன் மேல் மாகாணம் 99 தங்கம், 78 வெள்ளி, 81 வெண் கலமும்,இரண்டாமிடம் மத்திய மாகாணம் 51 தங்கம், 38 வெள்ளி, 60 வெண்கலமும்,மூன்றாமிடம்  வடமேல் மாகா ணம் 32 தங்கம், 33 வெள்ளி, 44 வெண்கலமும்,

நான்காமிடம் தென் மாகாணம்  29 தங்கம், 31 வெள்ளி, 45 வெண்கலமும்,ஐந்தாமிடம் சப்ரகமுவ மாகாணம் 19 தங்கம், 30 வெள்ளி, 38 வெண்கலமும், ஆறாமிடம் வடமத்திய மாகாணம் 17 தங்கம், 20 வெள்ளி, 41 வெண்கலமும்,ஏழாமிடம் ஊவா மாகாணம் 11 தங்கம், 23 வெள்ளி, 29வெண்கல மும்,எட்டாமிடம் கிழக்கு மாகாணம் 08 தங்கம், 06 வெள்ளி, 09 வெண்கலமும், ஒன்பதாமிடம் வடக்கு மாகாணம் 03 தங்கம், 09 வெள்ளி, 10 வெண்கலம் என மாகாணங்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளன.

 இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் தேசிய சாதனைகளும், போட்டி சாதனைகளும் நிகழ்த்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.பதுளையில் நிலவிய குளிர் காலநிலை மற்றும் தொடர்ச்சியான மழை, ஈரலிப்பான ஒடுபாதை என தேசிய விளையாட்டு விழா  சுவாரஸ்யம் இன்றி முடிவடைந்தது.ஆனாலும் போட்டி ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு விழாவை மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும். 


இறுதிநாள் நிகழ்விலும், பரிசளிப்பு வைபவத்திலும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். விளை யாட்டு துறை அமைச்சின்செயலாளர் சூலாநந்த பெரேரா, விளையாட்டு அபிவிருத்தி  திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல,விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகர் சுசந்திக்கா ஜெயசிங்க, பதுளை மாநகர சபை மேயர் பிரியந்தஅமரசிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .