2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

MCA Open Sixes தொடரின் Tier B சம்பியன்களாக CDB குழு தெரிவானது

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

CDB குழுவானது, வருடாந்த MCA Open Sixes கிரிக்கட் போட்டித்தொடரில், மலிபன் பிஸ்கட்ஸ் குழுவைத் தோற்கடித்து, Tier B சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியானது, MCAஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட D பிரிவுக்கான 40 ஓவர் போட்டியில், CDB வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் CDBஆனது, இந்த வருடம் இடம்பெற்ற இரண்டு MCA போட்டித்தொடர்களிலும் வெற்றிபெற்று, நிகரற்ற ஜாம்பவான்களாக மாறியுள்ளது.

MCA Cricket Sixes போட்டித்தொடரானது, முதன்முறையாக NBFI பிரிவில் விருதுகள் பல வென்ற நிதித்தீர்வுகள் வழங்குநரான சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) இனால் அனுசரணையளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித்தொடரில் Tier A பிரிவில் 12 குழுக்களும், Tier B  பிரிவில் 48 குழுக்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது 

பல்துறைகளில் சிறந்துவிளங்கும் சகலதுறை வீரராக, CDBஇன் டபிள்யூ.பி.டி.பி தர்மசிறி, ஐந்து விருதுகளில் மூன்றைத் தமதாக்கிக்கொண்டார். 13 ஆறு ஓட்டங்களுடன் இந்த போட்டித்தொடரில் அதிகூடிய ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற விருதையும், மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர், போட்டித்தொடர் நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார். இறுதிப்போட்டியின் நாயகன் விருதை, CDBஐச் சேர்ந்த புத்திக்க சில்வா தமதாக்கிக் கொண்டார்.

CDBஆனது, வெளிக்களச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதில் தொடர்ச்சியாக முன்னிற்பதுடன், முழுமையான குழுக்களை கட்டமைத்து, குழு மனப்பாங்கை, சகோதரத்துவத்துடன் மேம்படுத்துவதனையும் மேற்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றது. குறித்த இந்த இரண்டு வெற்றிகளும், CDB ஆனது, செயற்றிறனுள்ள குழு என்பதை வெளிப்படுத்துவதுடன், தொடர்ச்சியாக கிரிக்கட்டில் மாத்திரமன்றி, அனைத்து விளையாட்டிலும் தமது திறமைகளை வெளிப்படுத்துதலை நிரூபிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .