2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

#VOPL2014 - Facebook Fighter அணியை வீழ்த்தி Youtube Youngsters சம்பியன்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீரகேசரி இணையத்தளம் ஏற்பாடு செய்த இலங்கையின் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான #VOPL2014 மென்-பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின்,    விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தனராஜ் தலைமையிலானYoutube Youngsters அணி, அனுதினன் தலைமையிலான Facebook Fighter  அணியை வீழ்த்தி சம்பியனானது.

வீரகேசரி இணையத்தளம் இம்முறை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த பதிவர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தோருக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு 02,        மலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு பதினொருவர் கொண்ட இச்சுற்றுத்தொடரில்Facebook Fighter, Twitter Turskers, Youtube Youngsters, G+ Gangsters  ஆகிய நான்கு முன்னணி அணிகள் தமக்கிடையில் பலப்பரீட்சை நடத்தின.

இந்நிலையில் 6 லீக் போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் இரு இடங்களை பிடித்த facebook Fighter  மற்றும் Youtube Youngsters அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றYoutube Youngsters  அணி முதலில் Facebook Fighter அணியை களத்தடுப்பை மேற்கொள்ளுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடியYoutube Youngsters  அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 36 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Facebook Fighter  அணி 4.5 ஓவர்களில் 34 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இரு ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் #VOPL2014 கிண்ணத்தை Youtube Youngsters   அணி கைப்பற்றியது.

இப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக  Youtube Youngsters  அணியின் சந்திரமோகன் தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்து வீச்சாளராக  facebook Fighter அணியின் மதிசுதாவும் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக லகஷ்மி காந்தும் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டித்தொடரில் லகஷ்மி காந்த் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பழனி விஜயகுமார் தலைமையிலான Twitter Turskers  அணி இம்முறை லீக் சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.






















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .