2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவர் கெளரவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ. றமீஸ்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியின்போது
வெற்றி பெற்ற, சாதனை புரிந்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களை
பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

அதிபர் ஏ.எச். பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சாதனை மாணவர்கள் வீதி
வழியாக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்திய இசை வழங்கி ஊர்வலமாய்
அழைத்துச் செல்லப் பட்டனர்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாகாண மட்டத்தில் புதிதாக நான்று போட்டிச்
சாதனைகளை நிலை நாட்டியதுடன், கிழக்கு மாகாண மட்டத்தில் மொத்தப் புள்ளிப் பட்டியலில்
ஆண்கள் பிரிவில் இரண்டாவது பாடசாலையாகவும், அஞ்சலோட்டப் போட்டிப் பிரிவில் மாகாண
மட்டத்தில் மூன்றாவது பாடசாலையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இருபது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சிறந்த மெய்வல்லுநராக இப்பாடசாலையின் கே.
அஹமட் நுஸ்பான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவர் 100 மீற்றர் ஓட்டப்
போட்டியின்போது குறித்த தூரத்தை 11.10 செக்கன்களில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் புதிய
சாதனை படைத்துள்ளார். இம்மாணவர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியின்போது குறித்த தூரத்தை
22.49 செக்கன்களில் ஓடி புதிய மாகாண சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதேவேளை 20 வயதுக்குட்பட்ட 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின்போது ஏ.என்.
அலா அம்தான் மாகாண புதிய சாதனையையும் நிலை நாட்டியதுடன், இப்பாடசாலையின் 20
வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் ஓட்டப் போட்டியின்போது இப்பாடசாலை
மாணவர்கள் புதிய மாகாண சாதனையை  நிலைநாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X