2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர் கௌரவிப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட்

வவுனியாவில் நடைபெற்று வரும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் எறிபந்து போட்டியில் மடு வலயத்திலிருந்து அடம்பன் மத்திய மகா வித்தியாலய 17 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் 20 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் பங்கு பற்றியிருந்தன.

இப்போட்டிகளில் 20 வயது ஆண்கள் முதலாமிடத்தையும், 17 வயது பெண்கள் இரண்டாமிடத்தையும் 17 வயது ஆண்கள் மூன்றாமிடத்தையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். இதன்போது சாதனை படைத்த மாணவர்கள் விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X