2025 நவம்பர் 19, புதன்கிழமை

அரையிறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கிண்ண போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள், கடந்த வெள்ளியன்று முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.

இந்தப் போட்டியில், மாந்தை கிழக்கு பிரதேச செயலக அணியும் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணியும் மோதிக்கொண்டன. இதில், மாவட்ட செயலக அணி, 05 கோல்களைப் பெற்று, வெற்றியைத் தனதாக்கி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்ட அரச கிண்ண இறுதிப் போட்டி, இன்று பிற்பகல் 1 மணிக்கு, முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இறுதி நாள் போட்டியில், ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்ட செயலக அணியும் தபால் திணைக்கள  அணியும், ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், துணுக்காய் பிரதேச செயலக அணியும் மணலாறு பிரதேச செயலக அணியும், பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அணியும் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணியும் மோதவுள்ளதாகவும், ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X