Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்காக பிரதேச செயலகங்களுக்கிடையில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வேலணை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
யாழ்.மாவட்டச் செயலக நலன்புரி கழகம் தலைவர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
துடுப்பாட்டம், கால்ப்பந்தாட்டம் மற்றும் கயிறிழுத்தல் ஆகிய போட்டிகளின் இறுதிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஆண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாணப் பிரதேச செயலக அணி மோதவுள்ளது. பெண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்டப் போட்;டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பிரதேச செயலக அணியும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக அணியும் மோதுகின்றன.
ஆண்களுக்கான கால்ப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேச செயலக அணியும் மருதங்கேணி பிரதேச செயலக அணி மோதவுள்ளது.
ஆண்களுக்கான கயிறுழுத்தல் இறுதிப்போட்டியில் மருதங்கேணி பிரதேச செயலக அணியை எதிர்த்து தெல்லிப்பழை பிரதேச செயலக அணி மோதவுள்ளது. பெண்களுக்கான கயிறிழுத்தல் இறுதிப்போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து சங்கானைப் பிரதேச செயலக அணி மோதுகின்றது.



4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago