Editorial / 2017 ஜூன் 09 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கு இடையிலான நொக் அவுட் றக்பி தொடரான மைலோ ஜனாதிபதிக் கிண்ணத் தொடர், கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், இன்று ஆரம்பிக்கிறது. இந்தத் தொடர், பாடசாலைகள் றக்பி தொடருக்கு, மைலோ நிறுவனம், 25ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்கும் தொடராக அமையவுள்ளது.
முதற்பிரிவு அணிகளுக்கிடையிலான இந்தத் தொடர், 2 ஆண்டுகளின் பின்னர், சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், பாடசாலைகள் றக்பி தொடரில், முக்கியமான பங்காகக் காணப்படுகிறது.
இந்தத் தொடரின் 3 காலிறுதிப் போட்டிகளும், 2 அரையிறுதிப் போட்டிகளும், சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதோடு, அதன் பின்னர், குதிரைப் பந்தயத் திடல் அரங்கில், இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.
முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக, கொழும்பு றோயல் கல்லூரி, இந்தத் தொடரிலிருந்து விலகியிருந்தது. இதனால், தர்மராஜ கல்லூரி, அரையிறுதிப் போட்டிகளுக்கு, நேரடியாகத் தகுதிபெறும்.
ஏனைய 6 அணிகளும், 3 இடங்களுக்காகப் போட்டியிடவுள்ளன.
இதன்படி, வெஸ்லி கல்லூரி அணியும் சென். ஜோசப்ஸ் கல்லூரி அணியும், இன்று மாலை 4 மணிக்கு மோதவுள்ளன. நாளை 4 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், திரித்துவ கல்லூரியும் சென். பீற்றர்ஸ் கல்லூரியும் மோதவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில், இசிப்பத்தன கல்லூரியும் அந்தனீஸ் கல்லூரியும் மோதவுள்ளன.

இது தொடர்பான ஊடகச் சந்திப்பு, கொழும்பில் இடம்பெற்றபோது, ஜனாதிபதிக் கிண்ணத் தொடருக்காக, 25ஆவது ஆண்டாகவும், மைலோ நிறுவனம் அனுசரணை வழங்குவதை முன்னிட்டு, பாடசாலை அணிகளின் தலைவர்கள், கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தனர்.
அதேபோல, இந்தத் தொடருக்கு அனுசரணை வழங்குவதற்கு, நெஸ்லேயின் மைலோ ஆரம்பித்த போது, 23 பாடசாலைகள் மாத்திரமே, றக்பி போட்டிகளில் பங்குபற்றி வந்தன என்பதைச் சுட்டிக்காட்டிய, அந்நிறுவனத்தின் உப தலைவர் (கூட்டாண்மை நிறுவனங்கள்) பந்துல எகோடகே, தற்போது 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றுகின்றமை, அதிசிறப்பானது எனக் குறிப்பிட்டார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago