2025 நவம்பர் 19, புதன்கிழமை

இராணுவம், றிநௌண், புளூ ஸ்டார் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இராணுவ, றிநௌண் அணிகள் வெற்றிபெற்றன. நியூ யங்ஸ், கொழும்பு கால்பந்தாட்டக் கழக அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தொடரின் நடப்புச் சம்பியன்களான சொலிட் விளையாட்டுக் கழகத்துக்கும் இராணுவ  விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான போட்டியில், இராணுவ விளையாட்டுக் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இராணுவம் சார்பாகப் பெறப்பட்ட ஒரே கோலை, மொஹமட் இஸ்ஸடின் பெற்றுக் கொடுத்தார்.

றிநௌண் விளையாட்டுக் கழகத்துக்கும் ஹைலன்டர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான போட்டியில், றிநௌண் விளையாட்டுக் கழகம், 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில், ஹைலன்டர்ஸ் அணியின் எஸ்.எஸ் கல்கெட்டிய முதலாவது கோலைப் பெற்ற போதிலும், போட்டியின் 30ஆவது நிமிடத்தில் றிநௌண் சார்பாக 72ஆவது 87ஆவது நிமிடங்களில், றிநௌண் கழகத்தின் சி. ஒஜ்னெகியா, எம். சப்ராஸ் ஆகியோர் கோல்களைப் பெற, அவ்வணி 3-1 என்ற கோல் வெற்றியைப் பெற்றது.

புளூ ஸ்டார் அணிக்கும் களுத்துறை பார்க் அணிக்குமிடையிலான போட்டியில், புளூ ஸ்டார் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக கோல்களை மொஹமட் ஃபர்ஸீன், ஈ.பி. சன்னா (2 கோல்கள்), பர்ஹாத், றிச்சர்ட், ஷிஃபகத் ரகுமான் ஆகியோர் பெற்றுக் கொடுத்தனர்.

நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்துக்குமிடையிலான போட்டி, 2-2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.

நியூ யங்ஸ் சார்பாக 28ஆவது நிமிடத்தில் ஏ.ஜோர்ஜ் பெற்றுக் கொடுத்த கோலின் காரணமாக 1-0 முன்னிலையைப் பெற்ற அவ்வணி, 60ஆவது நிமிடத்தில் அவர் பெற்ற இரண்டாவது கோலின் உதவியுடன் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது. எனினும், 75ஆவது நிமிடத்தில் ஏ.சி. ஃபிராங்க், இறுதி நிமிடத்தில் ஸர்வான் ஜோஹர் ஆகியோர் பெற்றுக் கொடுத்த கோல்களின் உதவியுடன், கொழும்பு கால்பந்தாட்டக் கழகம், 2-2 என்ற சமநிலை முடிவைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X