Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர், 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக் கழகமும் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளன.
வல்வை விளையாட்டுக் கழகத்துக்கும் மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே புற்றளை இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றே வல்வை விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல் அணி 10 ஒவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 80 ஒட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக அணித்தலைவர் ரகுவரன் 54, வினோத்ராஜ் 12 ஒட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வல்வை அணி சார்பாக, கபிலன், ருதேஷா, விதுஷன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்தினர்.
பதிலுக்கு 81 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய வல்வை அணி 9.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கபிலன் 36, சிறிகரன் 18, சஞ்சீவன் 13 ஒட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் அணி சார்பாக, தினோஜன் மூன்று, வேணுகானன், தர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக கபிலன் தெரிவானார்.

கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பருத்தியூர் இளந்தளிர் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றே ஞானம்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இளந்தளிர் விளையாட்டுக் கழகம், 10 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, தீபன் 16, தினேஷ் 14, ரஜீ 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஞானம்ஸ் அணி சார்பாக ஜொனி இரண்டு விக்கெட்டுகளையும் செந்திரன், ரஜீவன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
பதிலுக்கு 60 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் அணி, 5.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜீவன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இளந்தளிர் அணி சார்பாக மது ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ஜீவன் தெரிவானார்.

55 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
5 hours ago