2025 நவம்பர் 19, புதன்கிழமை

உடற்பயிற்சியால் மனம் தூய்மை அடைகிறது

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 

'உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனம் தூய்மையடைந்து தேகம் ஆரோக்கியடையும். இதன்மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தமது கடமைகளை செய்ய முடியும்;' என கரடியானறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.மாலேகம் தெரவித்தார்.  

தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு வாரத்தியையொட்டி, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தேக ஆரோக்கிய நடை பயிற்சியை நேற்று (28) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
 
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஐந்து பாடசாலையைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட நடைபவனி பாடசலை முன்றலில் ஆரம்பமாகி பொலிஸ் நிலையம் வரை சென்றது.
 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
'எமது முன்னோர்கள் தங்களுக்கு விரும்பியவாறு பயிற்சிகளை செய்துவந்ததனால் அவர்கள் பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். ஆனால்,  தற்போதைய சூழ்நிலையில் வேலைப்பழு காரணமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இதன் காரணமாக பலர் சிறுவயதிலே நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.
 
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. இந்த நிதியைக் கொண்டு வைத்திய துறையை அபிவித்தி செய்யமுடியும். ஆனால் நாங்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு தேக ஆரோக்கியத்துடன் இருப்போமேயானால் சுகாதாரத்துக்கான செலவீனங்களை குறைக்க முடியும்' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X